கோடைக்கால தலை அரிப்பை தடுக்க சில டிப்ஸ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
கொளுத்தும் வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே நம்மில் பலருக்கு தலை அரிப்பு பிரச்சனை வந்து விடும். அதிகமாக தலை வியர்ப்பதால் உண்டாகும் அரிப்பை போக்க சில டிப்ஸ் இதோ. தலையில் எண்ணெய் அதிக அளவில் வைப்பதால் இறந்த செல்கள் மற்றும் தூசு போன்றவை தலையில் தங்கி அரிப்பை உண்டு பண்ணுகின்றன. இதனை தவிர்க்க வெயில் காலத்தில் வெளியில் செல்லும் போது தலையில் எண்ணெய் வைப்பதை தவிர்க்கலாம். மேலும் எலுமிச்சை பழத்தினை தலையில் தேய்த்து குளிப்பதால் தலையில் இருக்கும் இறந்த செல்கள், தூசு போன்றவை நீக்கப்படுவதோடு உடல் சூடும் குறையும். கோடை காலங்களில் ஹேர் கலரிங் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஷாம்பு பயன்படுத்திய பின் தலையில் கண்டிஷனர் போடும் போது அதனை முடியில் மட்டும் படுமாறு தடவவும், தலை வகிட்டில் அவை பட்டால் பொடுகை உண்டாக்கி தலை அரிப்பை இன்னும் அதிகப்படுத்தி விடும். கெமிக்கல் கண்டிஷனருக்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும், அரிசி வடித்த கஞ்சி, செம்பருத்தி போன்றவற்றை பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2,3 முறை தலைக்கு குளிப்பது நல்லது. வெயில் காலத்தில் வெளியில் செல்லும் போது காட்டன் துணியை தலையில் கட்டிக் கொண்டால் வியர்வை தலையில் தங்குவதை தடுக்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close