3 வயது சிறுவன் நெஞ்சில் 0.75 கிலோ கட்டி

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸாமில் என்ற சிறுவனின் நெஞ்சில், நுரையீரல் பகுதியில், 0.75 கிலோ எடையுள்ள பெரிய கட்டி ஒன்று இருந்துள்ளது. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அவனது பெற்றோர் அங்குள்ள பல மருத்துவமனைகளை நாடியுள்ளனர். ஆனால், கடினமான சிகிச்சை என்பதாலும் போதிய வசதிகள் இல்லாததாலும் அனைவரும் மறுத்துவிட்டனர். இறுதியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அவர்கள் இந்தியா வந்தனர். பல மருத்துவமனைகளில் அந்த சிறுவனை சோதித்து இந்த சிகிச்சைக்கு 5.5 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறிவிட்டனர். போதிய பணம் இல்லாமல் இருந்த அந்த குடும்பத்திற்கு டெல்லியில் உள்ள ஜீவன் மருத்துவமனை உதவிக்கு வந்தது. பண விஷயத்தில் அவர்களுக்கு உதவி செய்து, கட்டியையும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டனர். "இது ஒரு வினோதமான நோய். வலது நுரையீரலை இந்த கட்டி பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டது. முதுகுத்தண்டு மற்றும் நெஞ்சுக் கூட்டையும் இது பாதிக்கத் துவங்கியது. பொதுவாக இதுபோன்ற சிகிச்சை பெறுபவர்கள் முழுவதும் குணமாக 10-20% வாய்ப்பு தான் உண்டு. ஆனால், இந்த சிறுவன் குணமாக 80% வாய்ப்பு உள்ளது," என ஜீவன் மருத்துவமனையின் இயக்குனர் விபேந்திர சபர்வால் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close