சர்ச்சைக்கு நடுவே இந்தியாவின் முதல் கர்பப்பை மாற்று அறுவை சிகிச்சை..

  shriram   | Last Modified : 18 May, 2017 09:40 pm
இந்தியாவிலேயே முதல்முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை இன்று நடைபெறவுள்ளது. புனேவில் உள்ள கேலக்சி லேப்ராஸ்கோப்பி மருத்துவமனையில் 12 டாக்டர்கள் கொண்ட குழு இந்த சிகிச்சையை செய்ய இருக்கின்றனர். ஆனால், முதல் முறையாக இதுபோன்ற சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மருத்துவர் மாட்ஸ் ப்ரான்ஸ்ட்ரம், இந்திய டாக்டர்களை எச்சரித்துள்ளார். "இந்தியாவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில், அவசர அவசரமாக போதிய பயிற்சி இல்லாமல் செய்யும் அறுவை சிகிச்சை இது. இந்த சிகிச்சையை அமெரிக்க மருத்துவர்கள் 4 முறை செய்ய முயற்சித்து முதலில் தோற்றுப்போனார்கள். நாங்கள் செய்யும்போது கூட பல தரப்பு மருத்துவர்களின் உதவியுடன் தான் செய்தோம். 15 வருடங்களாக மிருகங்கள் மீது இந்த சிகிச்சையை செய்து தவறுகளை திருத்திக்கொண்டு, பின்னர் தான் அதில் எங்களால் வெற்றியடைய முடிந்தது. ஆனால், இதுபோல எதுவும் இல்லாமல் இந்திய மருத்துவர்கள் இப்படி செய்வது ஆபத்தானது," என்றார் அவர். கருப்பை இல்லாத ஒரு பெண்ணுக்கு அவரது தாயின் கருப்பையை பொறுத்த புனே மருத்துவர்கள் முயற்சிக்கிறார்கள். உலகிலேயே மிகவும் கஷ்டமான சிகிச்சைகளுள் ஒன்றாக இந்த அறுவை சிகிச்சை பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close