வாழைப்பழத்தில் இத்தனை நன்மைகளா?!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் நமது உடலில் விளையும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள். * வாழைப்பழத்தில் நிறைந்து இருக்கும் இரும்பு சத்து அனிமீயாவை குணப்படுத்தும். * சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் க்ளுகோஸ் போன்றவை உடலுக்கு இன்ஸ்டன்ட் எனர்ஜி தரக் கூடியவை. * குடலின் இயக்கத்தை சமநிலைப்படுத்தும் தன்மை வாழைப்பழத்திற்கு இருப்பதால் மலசிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த மருந்தாகும். வயிற்றுப்போக்கால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாழைப்பழத்துடன் கிரீம் கலந்து கொடுத்தால் வயிற்றுப் போக்கு மட்டுப்படும். * வாழைப்பழ மில்க்ஷேக் உடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஹேங் ஓவர் சரியாகும். * புகைப் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் தினம்தோறும் வாழைப்பழம் சாப்பிடுவது அப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெற உதவும். இதில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை உடலில் இருக்கும் நிக்கோட்டினை வெளியேற்றும் தன்மை கொண்டவை. * வாழைப்பழத்தில் உள்ள ட்ரைப்டோபான் எனும் அமினோ அமிலம் மூளையில் இருக்கும் செரோடினின் அளவை சமநிலைப்படுத்தி நமது மனநிலையை மேம்படுத்தும். * வாழைப்பழத்தில் குறைந்த அளவே சோடியம் இருப்பதால் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இதனை சாப்பிடுவது நன்மை பயக்கும். * அல்சருக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த நிவாரணி. * வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புவோர் அதிக அளவில் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close