சன்ஸ்க்ரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சன்ஸ்க்ரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை... * நல்ல பிராண்ட் சன்ஸ்க்ரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க.... * சன்ஸ்க்ரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF - Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்’ 15 உள்ள சன்ஸ்க்ரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 spf யூஸ் பண்ணுங்க * முகத்துக்கு மட்டும் இல்லைங்க வெயில் படும் எல்லா இடங்களையும்(கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் அப்ளை செய்யுங்க. * சன்ஸ்க்ரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் நீங்க வெளியில போகணும். * என்னதான் நீங்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்க பாருங்க. தொடர்ந்து வெயிலில் இருந்தால் , மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்க்ரீன் அப்ளைசெய்து கொள்ளுங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close