காப்பர் டி பற்றிய தகவல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். நிரந்தர தடைக்கு வேறு வழி உண்டு. * மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும். * காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். * காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. * காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம். எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது. * காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம். * குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும். குறிப்பு: கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close