ஆண்டுக்கு 60,000 யூனிட் ரத்தத்தை வீணாக்கும் கர்நாடகம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் யூனிட் ரத்தம் வீணாவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,88,537 யூனிட் ரத்தம் யாருக்கும் உபயோகம் ஆகாமல் அழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், '"ரத்தத்துக்குக் குறிப்பிட்ட ஆயுள்தான் உள்ளது. அதை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைக்க முடியாது. இதுதவிர, நோய்த் தொற்று, ரத்த சேகரிப்புப் பையில் குறைபாடு, போதுமான அளவு இன்மை போன்ற காரணங்களால் ரத்தம் வீணாகிறது. இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் ரத்தம் கிடைக்காமல் மருத்துவமனைகளில் அல்லாடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். ஆனால், தேவை அதிகம் இருந்தும் அதிக அளவில் ரத்தம் வீணாக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close