எனர்ஜியை அதிகரிக்கும் நான்கு உணவுகள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 14 Jun, 2017 03:38 pm
எப்போதும் ஆற்றல் இல்லாதது போல, சோர்வாக இருக்கின்றீர்களா? எப்போதும் புத்துணர்வுடன் இருக்க அதிகம் மெனக்கெட வேண்டாம். வாழ்க்கை முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும். எப்போதும் முழு எனர்ஜியுடன் இருக்கலாம். இதற்கு உதவும் நான்கு உணவுகளைத் தெரிந்துகொள்வோம். முட்டை: ஒரு நாளைக்குத் தேவையான புரதச் சத்தில் 30 சதவிகிதத்தை ஒரு முட்டையே கொடுத்துவிடும். இதில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் தசைகளை மறுகட்டமைப்புச் செய்ய உதவும். பாதாம்: நல்ல ஆரோக்கியமான நொறுக்குத் தீனி இது.இதில் தாமிரம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இது நாள் முழுவதும் உடலை ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். வாழை: இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. இது உடலுக்கு உடனடி எனர்ஜி அளிக்கும். உடற்பயிற்சி, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது. பயிறு வகைகள்: இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்து நிறைவாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close