22 வயது ஆணின் உடலில் இருந்து கர்ப்பப்பை - சினைப்பை அகற்றம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உதய்பூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், ஆண் இனப்பெருக்க மண்டல வளர்ச்சி சரியாக இல்லை என்று மருத்துவச் சிகிச்சைக்காக வந்திருக்கிறார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் அளவில் அவர் ஆணாக இருந்தாலும், உடலுக்குள் கர்ப்பப்பை மற்றும் இதர பெண் இனப்பெருக்க மண்டல உறுப்புக்கள் சரியாக வளர்ச்சி பெறாமல் இருந்திருக்கிறது. எனவே, இந்த உறுப்புக்களை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன்படி அவருக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த நபருக்கு அறுவைசிகிச்சை செய்த மகப்பேறு மருத்துவர் கூறுகையில், "மருத்துவ வரலாற்றில், இதுபோல 400 கேஸ்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்ணின் உடலில் கர்ப்பப்பை உள்ளிட்ட உறுப்புக்கள் எங்கே இருக்கும் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால், ஓர் ஆணின் உடலில் அதைத் தேடி அகற்றுவது என்பது மிகவும் சிக்கலாக இருந்தது. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது அவர் முழு ஆணாக இருப்பார்'' என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close