பழங்களை சாப்பிடுவது நன்மையா?

Last Modified : 01 Jan, 1970 05:30 am
உணவே மருந்து என்ற காலம் போய், மருந்து மட்டுமே நம் உணவு என்ற நோய் உலகில் நம்மை அறியாமல் நாம் நுழைந்து விட்டோம். அதனை உணர ஆரம்பித்தவுடன், நிதம் பழ சாறு, பழங்கள், நவ தானியங்கள் என சாப்பிட ஆரம்பித்து இருக்கிறோம். இது நம் உடல் நலத்திற்கு நல்லது தான் என்றாலும், அதனை நாம் சரியாக தான் சாப்பிடுகின்றோமா என்பது ஆச்சரியம் கலந்த கேள்வி குறி ? நாம் உண்ணும் பழங்களை எப்படி, எவ்வாறு சாப்பிடுவது என்பதனை பார்ப்போம். * பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்கள் வெளியேறுவதுடன், எடை குறைப்பு, மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. * உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து கெட்டு போவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது. * நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்து கொள்ளாததுதான் காரணம். * பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, 'புதிதான' பழச்சாறுகளையே அருந்துங்கள். * பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களில் உள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிந்துவிடுகின்றன. உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது. பழச்சாறு சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. * பழச்சாறு அருந்தும்போது மடமடவென்று குடிக்காமல், உங்கள் வாயிலுள்ள உமிழ்நீரோடு கலந்து குடிக்க வேண்டும். * வாரத்தில் 3 நாட்கள் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடல் உறுப்புகள் சுத்தமாகி உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி விடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close