மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் மற்றும் உடல் வலிகளை அக்குபஞ்சர் மூலம் குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் வேக் பாரஸ்ட் மருத்துவ மையத்தில் 209 பெண்களை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சியில் அக்குபஞ்சர் சிகிச்சையால் உடல் கொதிப்பு, எரிச்சல், மனஉளைச்சல் மற்றும் அதிக கோபம் போன்ற அறிகுறிகள் 30% குறைந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது எல்லா பெண்களுக்கு பொருந்தா விட்டாலும் பலர் இதின் மூலம் பயன் பெறலாம் என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள்.