உடல் பருமனை குறைக்க இத குடிங்க

Last Modified : 29 Jun, 2017 05:17 am
எந்த வித உடற்பயிற்சியும் இன்றி உடல் எடை குறைய இந்த 6 வகையான பானத்தை தினமும் உட்கொண்டால், உடல் சிக்கென்று ஆவது மட்டும் இன்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். தண்ணீர் :- இது ஒரு சிறந்த பானம், அடிக்கடி தண்ணீர் அருந்தும் போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி எடை குறையும். மேலும் இதனுடன் எலுமிச்சை பழ சாறு சேர்த்து உட்கொள்ளும் போது உடலில் உள்ள நச்சுக்கள் எரிக்கப்படுகின்றன. வெஜிடெபிள் சூப் :- ஊட்டச்சத்து நிறைந்த பானம், இது உடலில் உள்ள மெட்டபொலிஸதின் ஆற்றலை தூண்டுகிறது. மேலும், இதனை இரவு உணவுக்கு முன் உட்கொள்ள கலோரிகளின் எண்ணிக்கை மட்டுப் படுகிறது. க்ரீன் டீ :- உடல் எடை குறைய க்ரீன் டீ கரெக்ட் சாய்ஸ். இது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சீரான முறையில் வைத்து உடல் பருமனை குறைக்கிறது. மேலும், தினமும் 2 கப் க்ரீன் டீ அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வெஜிடெபிள் ஜூஸ்:- வெஜிடெபிள் சூப்பில் உள்ளது போன்றே வெஜிடெபிள் ஜூஸ்ஸிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. கோடை காலத்தில் ஜூஸ்ஸும், பனி காலத்தில் சூப்பும் குடிப்பது சிறப்பு. பிளாக் காபி :- இது உடலில் உள்ள மெட்டபொலிஸதின் ஆற்றலை தூண்டுகிறது. மேலும் இது தேவை இல்லாத கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது. காபியில் உள்ள காஃ பைன், தேவை இல்லாத கலோரிகளை எரிக்க பெரிதும் உதவுகிறது. நாள் ஒன்றுக்கு, ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இதனை குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் எதிர்வினையான விளைவுகள் நேரிடும். ஆடை நீக்கிய பால் :- விட்டமின் டி சத்து நிறைந்த இந்த பானம் உடலுக்கு நல்லது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close