மார்பக புற்றுநோயைத் தவிர்க்கு நான்கு உணவுகள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 08 Jul, 2017 08:26 pm
மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, 2020ல் மிக அதிக அளவில் அதிகரிக்கும் என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது உலகச் சுகாதார அமைப்பு. 8ல் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் கூட, இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்று தெரிவித்துள்ளது. நம்முடைய உடலில் தினசரி ஏராளமான புற்றுநோய் செல்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியானது அதை அழித்துவிடுகிறது. எனவே, நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கம் காரணமாகப் புற்றுநோய் வாய்ப்பை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும்... மற்றும் ஆரம்பநிலையிலேயே கண்டறிவதன் மூலம் எந்தவித பாதிப்பும் இன்றி அதில் இருந்து வெளிவர முடியும். புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் சில உணவுகளைத் தெரிந்துகொள்வோம். ஃபிளெக்ஸ்சீட் ஆளி விதை எனப்படும் ஃபிளெக்ஸ் விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. மேலும், இதில் காணப்படும் ஒருவகையான நார்ச்சத்தானது புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூண்டு பூண்டு குடும்பத்தைச் சேர்ந்த பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை அதிகமாக உள்ளது. இதைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் மட்டுமல்ல... வயிறு இரைப்பை, ப்ராஸ்டேட் புற்றுநோயைக் கூடத் தவிர்க்க முடியும். மாதுளை ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று மாதுளம் பழத்தைச் சொல்வார்கள். இதில் பாலிஃபீனால், ஆன்டிஆக்சிடென்ட் நிறைவாக உள்ளன. இவை, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தவிர்க்கும். கீரை - பச்சை நிற காய்கறிகள் கீரை, ப்ரோக்கோலி உள்ளிட்ட உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, நுண்ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் புற்றுநோய் வராமல் காக்கும். இதனுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுய பரிசோதனை, ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தலாம். ஆரோக்கியமாக வாழலாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close