காபி குடித்தால் நீண்ட நாள் வாழலாம்; புதிய ஆய்வு

Last Modified : 11 Jul, 2017 01:58 pm
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காபி குடிப்பதால் நம்முடைய வாழ்நாட்கள் நீடிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் காபி குடிப்பவர்களுக்கு, சர்க்கரைநோய், புற்றுநோய், பார்கின்சன் நோய், பக்கவாதம் ஆகியவற்றின் தாக்கம் குறைவு எனவும், இதனால் அவர்களின் இறப்பு வீதம் 18% குறைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் பீனாலிக் கலவை காப்பியில் அதிகம் இருப்பதால் முக்கியமாக புற்றுநோய் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த ஆய்வு அமெரிக்கா, ஆசியா , ஐரோப்பா ஆகிய அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளது. இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close