கருவளையமா? கவலை வேண்டாம். இதப்படிங்க ...

Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம்ம உடம்புல கவர்ச்சியான புலன் எதுன்னு கேட்டா கண்ண மூடிட்டு சொல்லிடலாம் 'கண்ணு'த்தான்னு.. அப்படிப்பட்ட கண்ண நாம எப்படி பாத்துக்கணும் கலங்காம தான? அட கண்ணு கலங்குன கூட பரவாலங்க 'கருவளையம்' இல்லாம பாத்துக்குறது ரொம்ப முக்கியம் !! ஆனா ஏற்கனவே இந்த பிரச்சனை இருக்குனு சொல்லுறவங்களுக்கு சில டிப்ஸ் : # அரிசி, கருஞ்சீரகம் தலா 2 ஸ்பூன் எடுத்து அரை கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பின் அந்த நீரை ஆற வைத்து வடிகட்டி அதில் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளவும்.தினமும் இரவில் இந்த நீரை பஞ்சினால் தொட்டு கண்களில் வைத்து வர கருவளையம் வேகமாக மறையும். # ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து நன்றாக கொதிக்க வைத்து அதில் சாமந்தி இதழ்களை போட்டு மூடி வைக்கவும் அதனை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சினால் கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். உடனடியாக பலன் தரும். # தாமரை பூ இதழை தண்ணி விடாமல் அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் கலந்து 7 மணி நேரம் அறை வெப்பத்திலேயே வைத்திருங்கள். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, இரவுகளில் இந்த கலவையை கண்களை சுற்றி போடுவதால் விரைவில் பலன் தெரியும். இதை ட்ரை பண்ணி கருவளையத்தை மறையுங்க ஆனா முக்கியமா நைட்ல டிவி செல்போன் ரொம்ப நேரம் யூஸ் பண்ணாம சீக்கிரமா தூங்க போனாவே இந்த பிரச்சனை வராது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close