கீரையின் மருத்துவ பயன்கள்!

Last Modified : 14 Jul, 2017 06:26 am
கீரை உணவு மட்டுமல்ல... மிகச்சிறந்த மூலிகையும் கூட. தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துவந்தால், செரிமானம் மேம்படும், உடல் எடை குறையும். கீரைகளின் பலன்களைத் தெரிந்துகொள்வோம்... 1.அகத்திக் கீரை: ரத்தத்தை சுத்தமாக்கி, பித்தத்தை தெளிய வைக்கும். 2.பசலைக்கீரை: தசைகளை பலமடையச் செய்யும். 3.குப்பை மேனி கீரை: பசியை தூண்டும். வீக்கத்தை வத்த வைக்கும். 4.பொன்னாங்கன்னி கீரை: உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். 5.முருங்கைக் கீரை: ரத்தசோகையை நீக்கும், பார்வை திறன் மேம்படும், உடல் பலம் பெரும். 6.வல்லாரை கீரை: மூளைக்கு பலம் தரும். 7.முடக்கத்தான் கீரை: கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும். 8.புதினாக் கீரை: ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும். 9.பருப்பு கீரை: பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். 10.புளிச்ச கீரை: கல்லீரலை பலமாக்கும், மாலை கண் நோயை விலக்கும். 11.மணத்தக்காளி கீரை: வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 12.முளைக்கீரை: பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வோம். உடல் ஆரோக்கியம் பெறுவது மட்டும் இன்றி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close