• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற பல வருட கேள்விக்கு, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவு விடையை தந்துள்ளது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஆனால் முட்டையிலிருந்து தான் ஆரோக்கியம் வந்தது என்று நாமே சொல்லிவிடலாம். தினமும் முட்டை சாப்பிடுவது சரியா என்று சிலருக்கு தயக்கம் இருக்கும். ஆனால் தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். குறிப்பாக, வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். * வைட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்கு தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு. * குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்கள், ஒமேகா-3 / ஃபேட்டி ஆசிட்கள் போன்றவை நிறைந்துள்ளது. * முட்டையின் வெள்ளை கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. * முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலிமை சேர்க்கும். * மேலும், இதில் உள்ள ஆன்டி-அசிடெண்ட்டுகள் கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. * முட்டையில் எவ்வளவு தான் கொழுப்பு சத்துக்கள் இருந்தாலும், அவை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்காது. * இது உடல் எடை அதிகரிப்பை தடுத்து, எடையை பராமரிக்கும். * முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலுவடையும். மேலும், புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close