உங்களுக்கு பயனுள்ள தகவல்கள்

Last Modified : 19 Jul, 2017 05:36 am
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம். ஆமாங்க, நாம சம்பாதிக்கிற பாதி பணம் கரெக்டா எங்க போகுதுனு சொல்லுங்க..? டாக்டர் கிட்ட தான். சின்ன விக்கல், தும்மல் எதுக்கெடுத்தாலும் டாக்டர்... ஆனால் கிச்சனில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே இதை நம்மால் சரி செய்ய முடியும். தீராத விக்கல் :- 1. ஒரு 30 வினாடிகள்...இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்..பறந்து போகும் விக்கல்! உடல் துர் நாற்றமா :- 1. குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! வாய் துர்நாற்றமா :- 1. எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? :- 1. வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி வயிற்றுப் போக்கும் நிற்கும். வேனல் கட்டி தொல்லையா? :- 1. வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும். மூக்கடைப்பா :- 1. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும். 2. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும். இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களுக்கு டாக்டர் கிட்ட போகாம வீட்லயே சரி பண்ணி நீங்களே டாக்டரா மாறிடுங்க....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close