காளானின் மருத்துவ குணங்கள் !!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. பல வகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. நாம் சமையலுக்காக உபயோகப்படுத்தக்கூடியது whitebutton, oyster உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகைகளைத்தான். ரத்த அழுத்தம் : காளானில் குறைந்த அளவு சோடியமும் மற்றும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இதயத்திற்கு : காளானில் இருக்கும் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் சீராகவும் செயல்படுகிறது. புற்றுநோய் : புற்றுநோய் செல்களை அதிகரிக்கவிடாமல் தடுக்கும் தன்மை படைத்தது காளான். சில வகை காளான்கள் கீமோ தெரபி சிகிச்சையில் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கும் திறன் கொண்டவை. ஆன்டி ஆச்சிடென்டுகள் அதிக அளவில் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு மட்டுமல்லாமல் புற்றுநோயையும் தடுக்கவல்லது காளான். கொழுப்பை கட்டுக்குள் வைக்கிறது : இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இத்தகைய மருத்துவ குணம் படைத்த காளானை வாரம் ஒரு முறை உண்டு வந்தால் நோயின்றி வாழலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close