கொசுவை விரட்டும்... சைனஸுக்கு மருந்தாகும் நொச்சி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நொச்சி... புதர்ச்செடியாகவும் சிறுமரமாகவும் வளரக்கூடியது. சமவெளிகளில் 4 மீட்டர் உயரமும் மலைப்பகுதிகளில் 6 மீட்டர் உயரமும் வளரக்கூடியது. கொசுவை விரட்டப் பயன்படுவதால் நொச்சி இப்போது பிரபலமாகி உள்ளது. நொச்சியை வீடுகளில் வளர்த்து வந்தாலே கொசுக்கள் வராது என்பது கற்பனைக்கதை. நொச்சி இலை காய்ந்ததும் அதை புகைமூட்டம் போட்டால் கொசுக்கள் விலகி ஓடிவிடும். அதேநேரத்தில் நொச்சி இலையுடன் வேப்பிலை சேர்த்து அரைத்து காய வைத்து கொசுவத்தி போல தீமூட்டி எரியச்செய்தாலும் கொசுக்கள் விலகிச்செல்லும். நொச்சி இலையை பச்சையாகவோ அல்லது உலர்த்தியோ தலையணை உறைக்குள் வைத்து அதன்மீது தலை வைத்து உறங்கினால் தலைவலி, ஜலதோஷம், பீனிசம் என்று சொல்லப்படும் சைனஸ் சரியாகும். மூக்கடைப்பு, தும்மல், ஜலதோஷம், சளித்தொல்லை என தொடர் பிரச்சினைகளால் அவதிப்படுவோர் நொச்சி இலைகளை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து (ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல்) அதிலிருந்து வெளிவரும் சூடான ஆவியை மூக்கால் உள்ளிழுத்தால் (நுகர்வதால்) நிவாரணம் கிடைக்கும். நொச்சி, மிளகு, பூண்டு, இலவங்கம் (கிராம்பு) போன்றவற்றை மென்று தின்றால் இரைப்பு நோய் குணமாகும்.மேலும் நொச்சி இலையை சுக்கு சேர்த்து அரைத்து நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பற்று போட்டால் தலைவலி சரியாகும். வலி, வீக்கம், கீல்வாயு வந்தால் நொச்சி இலையை வெறுமனே வதக்கி ஒத்தடம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும். அடிபட்ட வீக்கம்... உடம்பில் தலை முதல் கால் வரை எந்த பகுதியில் அடிபட்டாலும் இந்த ஒத்தடம் பலன் தரும். இந்த ஒத்தட சோதனை எலிகளுக்கு பரீட்சித்துப் பார்த்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எலி மட்டுமல்ல... நானே பலமுறை செய்திருக்கிறேன், நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நொச்சி இலைச்சாறு அல்லது இலையுடன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி பொறுக்கும் சூட்டில் சிறிதளவு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் சைனஸ், கழுத்தில் நெறிகட்டுதல், கழுத்துவலி போன்றவை சரியாகும். நொச்சி, பொடுதலை, நுணா இலை போன்றவற்றால் ஆன கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தத்தை கட்டுப்படுத்தும். மலைச்சரிவுகளில் மண் அரிப்பை தடுக்க நொச்சி செடிகளை நெருக்கமாக பயிரிடலாம். ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றின் கரைகளிலும் இவற்றை நட்டு வைக்கலாம். இதனால் கரைகளுக்கு வலு சேர்ப்பதோடு வெள்ளம் ஏற்படும்போது கரைகள் உடையாமல் காத்துக்கொள்ளும். நீர் செழிப்புள்ள இடங்களில் நொச்சி காற்றை தடுக்கும். இவை எல்லாவற்றையும்விட, புற்றுநோயைக்கூட குணப்படுத்தும் தன்மை நொச்சி இலைக்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. - தமிழ்க்குமரன்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close