தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு! தவிர்க்க... தப்பிக்க

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Aug, 2017 05:50 pm
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இது ஏடிஸ் எஜிப்டி என்ற கொசு கடிப்பதால் பரவும் வைரஸ் காய்ச்சல். இந்த கொசுக்கள் நன்னீரில் வளரக்கூடியவை. பகல், அதிகாலை, மாலை நேரத்தில்தான் இந்த வகை கொசுக்கள் கடிக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் கொசு கடிப்பதைத் தவிர்க்கலாம். மேலும், வீட்டைச் சுற்றிலும், உடைந்த பழைய பிளாஸ்டிக் பக்கெட், தேங்காய் சிரட்டை, இளநீர் கூடு, ஆட்டுக்கல் போன்றவற்றில் தேங்கும் மழை நீரில் இந்த கொசு வேகமாக வளரும். எனவே, வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர் குடித்த பிறகு, இளநீர்க் கூட்டை தண்ணீர் தேங்காத வகையில், சிறு துண்டுகளாக வெட்டி வீசலாம். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை இல்லை. ஆனால், அதன் பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பலாம். ஆனால், கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது, கொசு கடிக்காமல் பாதுகாப்பாக இருப்பது, நில வேம்பு குடிநீர் அருந்துவது போன்றவற்றின் மூலம் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பலாம். நிலவேம்பு குடிநீர்... நிலவேம்பு குடிநீர் என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோறைக் கிழங்கு போன்றவை சேர்ந்து தயாரிக்கப்படும் கஷாயம் ஆகும். 5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மிலி தண்ணீரில் போட்டு 100 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். இதை காய்ச்சல் உள்ளவர்கள் மட்டுமின்றி எல்லோரும் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும். தொடர்ந்த நிலவேம்பு குடிநீர் அருந்திவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் அண்டாது. அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. பொடியாக தேவைப்படுபவர்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம். பப்பாளி இலைச் சாற்றை 5 முதல் 10 மி.லி வெறும் வயிற்றில் அருந்தினால், டெங்கு காய்ச்சல் குறைந்து, ரத்த தட்டணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close