பெண்களே நீங்கள் தூங்காமல் வேலை செய்தால் .. இந்த பிரச்சனையை சந்திப்பீர்கள் !!

Last Modified : 08 Aug, 2017 04:47 pm
பொதுவாக பெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற பழக்க வழக்கங்களால், தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்துவிட்டார்கள். மேலும், தற்போதைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகாலை எழுந்து கணவருக்கும், குழந்தைகளுக்கும் சமைத்து வைத்து விட்டு, குழந்தைகளை குளிப்பாட்டி, காலை உணவை தந்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பின்னர் கணவரை வேலைக்கு செல்ல டாட்டா சொல்லிவிட்டு, வீட்டை சுத்தும் செய்து, இருப்பதை கொறித்து விட்டு தான் அலுவலகம் செல்ல வேண்டிய நிலையில் இன்றைய தலைமுறை பெண்களின் நிலை உள்ளது. காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. என்னதான் கணவர் வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டாலும், பெண்களுக்குத்தான் கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்கமுடியாத நிஜம். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான சிக்கலுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை காரணமாக ஆரம்ப காலகட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் குழப்பங்கள் உண்டாகும். குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும். தூக்கமின்மை என்பது, நம் உடல்நலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் - உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close