இயற்கை மருத்துவ முறைகள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

நமக்கு நோய் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடிச் செல்லாமல் வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே நோயை எளிதாக குணப்படுத்தலாம். அதைப் பற்றி இங்கு காண்போம். * தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். மேலும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் கிடைக்கும். * தினமும் சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை சாப்பிட்டால் அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் வாயில் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது. * வெந்தயக்கீரை மற்றும் கொத்தமல்லித்தழை இரண்டையும் ஒன்றாக சேர்த்து மைய அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் தலைமுடி பட்டுப்போல் ஆகும். * பாகற்காயை நறுக்கி வெயிலில் காயவைத்துத் தூளாக்கி கொள்ள வேண்டும். இதில் ஒரு டீஸ்புன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வர அல்சர் விரைவாக குணமாகும். * தினமும் ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற வைத்து பிறகு அந்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்தவொரு நோய்களும் அவர்களை நெருங்காது. * வெள்ளை எள்ளை ஒரு வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்புன் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கும். * சருமப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு அக்கி கிருமிகள் விரைவாக குணமாகும். * புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும். * கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்க வேண்டும். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளநரை சீக்கிரமே மறைந்து விடும். * உடல் சூடு தணிய வல்லாரை இலை மற்றும் சின்ன வெங்காயம் சாப்பிடலாம். மேலும் உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர், இளநீர் வெந்தயம், ஆகியவற்றை ஊறவைத்த நீர் அருந்தலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.