குழந்தைகள் தொடர்ந்து டிவி பார்த்தால் சர்க்கரை நோய் வருமாம் !!

Last Modified : 18 Aug, 2017 07:11 am
இன்றைய கால கட்டத்தில் டிவி என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்ட ஒன்று. டிவி பார்க்காமல் ஒரு நாள் முழுமை அடைவதில்லை. சிறியவர்கள் தொடங்கி, முதியவர்கள் வரை அனைவருமே, டிவி பெட்டியை தங்களது குடும்ப உறுப்பினராகவே கருதும் அளவுக்கு, அதனுடன் நாம் பின்னிப் பிணைந்துவிட்டோம். ஓடி விளையாட வேண்டிய வயதில், குழந்தைகள் வீட்டுக்குள் அடைந்தபடி, டிவி.,யில் வரும் கார்ட்டூன் படங்களை பார்ப்பதுதான் இன்றைக்கு பெரும்பாலான நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் அரங்கேறுகிறது. ஆனால், இப்படி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி, டிவி பார்ப்பதால், ஏற்படும் விளைவுகள் பற்றி, லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து 3 மணி நேரங்களுக்கு மேலாக டிவி பார்ப்பவர்களுக்கு பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என, உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறியவர்கள் எனும்போது, 3 மணிநேரத்திற்கு மேல் தினசரி டிவி பார்க்கும் பழக்கம் இருந்தால், அவர்களின் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இன்சுலின் சுரப்பே அதிகளவு பாதிக்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு, உடற்பருமன், எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவிலேயே வந்துவிடுவதாக, அந்த ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், சோம்பேறித்தனம் அடைவதால், நமது உடல் உறுப்புகளின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய நோய்கள் குழந்தைகளை இலகுவாக பாதிக்கின்றன. எனவே கணினி, மொபைல் போன், வீடியோ கேம் என்று விளையாட கொடுக்காமல், வியர்வை சிந்த சக நண்பர்களுடன் விளையாட வையுங்கள். குழந்தைகளை நோயில் இருந்து காத்திடுங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close