கண் சிவந்து போவதற்கான காரணங்கள் !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றைய நாகரீக வாழ்வில் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவரை காண்பது அரிது. இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது கண்ணெரிச்சல், உடல் எடை அதிகரிப்பு, ஆண்மை குறைபாடு என பல சொல்ல முடியாத பிரச்சனைகள் பரிசாய் கிடைக்கின்றன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டக்கென்று பாதிக்கப்படுவது கண்ணெரிச்சலும், கண் சிவப்பாக மாறுவதும் தான். சிலருக்கு கண்கள் அடிக்கடி சிவந்து, விஜயகாந்த் மாதிரி தெரிய பல காரணங்கள் இருந்தாலும், அதை பற்றி கண்டுகொள்ளாமல் பக்கத்து கடைகளில் கிடைக்கும் சில மருந்துகளை வாங்கி பயன்படுத்துவர். (மருத்துவரின் ஆலோசனை இன்னாமல் மருந்துகளை பயன்படுத்துவது மிகவும் தவறு). கண்கள் சிவப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றை பார்ப்போம். தூக்க மாத்திரை : சில மக்களோ மன அழுத்தம் காரணமாக தூக்கத்திற்கு தூக்க மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி அடிக்கடி தூக்க மாத்திரை சாப்பிடுவதால் கண்களை வறண்டு அலர்ஜியை ஏற்படுத்துவதுடன், கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் இரத்த ஓட்டத்தை குறைத்து கண்களை சிவப்பு நிறமாக மாற்றுகிறது. அதிகமாக மது அருந்தக் கூடாது : நாம் அதிகமாக மது அருந்தும் போது, இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதனால் கண்களைச் சுற்றியுள்ள மிக நுண்ணிய இரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து கண்களை சிவந்து போவதற்கு காரணமாக இருக்கிறது. சிகரெட்டினாலும் கூட : தினமும் சிகரெட்டை அடிக்கடி புகைத்தால், அது நமது கண்களைச் சுற்றியுள்ள நரம்புகள் இறுக்கம் அடையச் செய்து, கண்கள் சிவந்து போகச் செய்கின்றது. தூங்குவதால் கூட : கண்களை பாதிக்கும் வகையில் தூங்கும் போதும் கூட இரத்த அழுத்தம் திடீரென கண்களில் அதிகமாகி சிவந்து போகும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்தினாலே அல்லது அதிகம் பார்த்து கொண்டிருந்தாலோ கண் சிவந்து போக வாய்ப்பு உண்டு. எனவே எதுவும் அளவோடு பயன்படுத்தினால் நன்று !!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close