உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ் !!

Last Modified : 23 Aug, 2017 11:48 am

* ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ள வேண்டும். * உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிட வேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்) * உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும். * உணவை கையால் எடுத்து சாப்பிட வேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது. * சாப்பிடும் முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்) * சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல. * குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது. * அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்கு சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம். * காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும். * இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று, விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது. * தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சுழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும். * படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும். * டீ, காப்பி போன்றவற்றை தவிர்த்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம். * நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது. * தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது. * காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும். * உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close