10 ஈசி அழகு குறிப்புகள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட இயலும். * கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு நீரை ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். * இளம் சூடான ஒரு லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். * கை கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால் தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். * இரவு படுக்கும் முன் புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரைமூடி எலுமிச்சை பழ சாறு ஆகியவற்றுடன் பயித்தம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸில் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். * தக்காளி அல்லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். * பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் பால் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென மாறும். * பழுத்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக மாறும். * உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். * வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close