டான்ஸ் ஆடுங்கள்; இளமையாக இருங்கள்!!

  shriram   | Last Modified : 27 Aug, 2017 05:01 pm

உலகம் முழுவதும் எல்லோருக்கும் வரும் பொதுவான பயம் ஒன்றே ஒன்று தான். அது வயதாவது. இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக பல மருத்துவ முறைகளையும், மூலிகைகளையும், மேக்-அப்களையும் வயதானவர்கள் பயன்படுத்துகிறாரக்ள். ஆனால், வயதானால் மூளையில் ஏற்படும் முதிர்ச்சிக்கும் நோய்க்கும் மேக் அப் போட முடியாது. தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆராய்ச்சியின் முடிவுகளில் இதற்கு பதில் கிடைத்துள்ளது. ஆம், உடற்பயிற்சி, டான்ஸ் போன்ற செயல்களின் மூலம், மூளைக்கு ஏற்படும் முதிர்ச்சியை தடுக்கலாம் என ஜெர்மனி ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில், 68 வயது முதியவர்களை தேர்ந்தெடுத்து அதில் சிலருக்கு உடற்பயிற்சியும், சிலருக்கு நடன பயிற்சிகளும் கொடுக்கப்பட்டதாம். ஒன்றரை வருடம் நடந்த இந்த பயிற்சிகளின் முடிவுகளில், இரண்டு தரப்பினருக்குமே, மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் வளர்ச்சி தெரிந்ததாம். அல்சைமர் நோயினால் இந்த பகுதி தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. நியாபக சக்திக்கும் இந்த பகுதி மிக முக்கியமாம். "இந்த ஆராய்ச்சியை இரண்டு விதமாக நடத்தினோம். இரண்டிலுமே மூளையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஆனால், நடனம் ஆடியவர்களுக்கு ஏற்பட்ட முன்னேற்றம் நன்றாக தெரிந்தது. அவர்களால் முன்பை விட நிதானமாக தடுமாறாமல் செயல்பட முடிகிறது," என்றார் இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானி கேத்ரின் ரெஹ்பெல்ட்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close