வேப்ப எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும். இதே போல் இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து, நன்கு மையாக அரைத்து அதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதன் பின்பு குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.