உடல் பருமனால் பெண்களை விட ஆண்கள் உயிருக்கு ஆபத்து அதிகம் என ஆக்ஸ்போர்ட், கேம்ரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. மிகவும் பருமனானவர்கள் தங்களின் ஆயுட் காலத்தில் பத்து வருடங்கள் வரை இழக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்கம், பெண்களைவிட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதிக எடையுடன் இருப்பது இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்தினையும் அதிகரிக்கிறதாம். ஆண்களே உஷார்!