குழந்தைகள் கைசூப்புவதும், நகம் கடிப்பதும் கெட்ட பழக்கம் என அதனைத் தடுக்க பல பெற்றோர்கள் பாடாய்ப் படுவார்கள். ஆனால், கைசூப்பும் குழந்தைகள் தங்களின் மிகச்சிறிய வயதிலேயே கிருமிகளுடன் இருக்க ஆரம்பித்துவிடுவதால் அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பெருகி அதனால் குப்பை, தூசி, செல்லப் பிராணிகளிடமிருந்து வரும் தொற்று முதலிய அலர்ஜி சம்பந்தமான நோய்கள் தடுக்கப் படுவதாக Ontario பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Malcolm Sears என்னும் பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார்.