மது அருந்துவதால் புற்று நோய் வரலாம்!

  நந்தினி   | Last Modified : 22 Jul, 2016 07:17 pm

மது அருந்துவதால் கல்லீரல் மட்டுமன்றி உடலின் பல்வேறு பாகங்களை தாக்கும் 7 விதமான புற்று நோய்கள் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து இதற்கு முன்பு வரை நிரூபிக்கப்படாத நிலையில் சமீபத்தில் இதற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளதாக ஒட்டாகோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஜென்னி கானர் தெரிவித்தார். மேலும் பெண்கள் மது அருந்துவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாகவும் கூறினார். எனவே மது அருந்துவதை நிறுத்துவோமேயானால் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்பையும் குறைக்கலாம்! நம் குடிமகன்கள் கேட்பார்களா?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close