இன்று நம்மில் பெரும்பலானவர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது வாய் துர்நாற்றப் பிரச்சனை. என்னதான் செய்தாலும் இந்த வாய் துர்நாற்றம் மட்டும் போகாமல், வந்து கொண்டே இருக்கும். இப்பிரச்சனைக்கு நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடிவு கட்டலாம். 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடி, 2 டேபிள் ஸ்பூன் தேன் இவை மூன்றையும் சிறிது நீர் சேர்த்து கலக்கி கொள்ளவும், பின்னர் தினமும் இருமுறை இந்தக் கரைசலால் வாயை கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனை முற்றிலுமாக சரியாகி விடும்.