பேலியோடயட் ஆரோக்யமா?

  தனலக்ஷ்மி   | Last Modified : 27 Jul, 2019 09:47 am
peliyo-diet

நான் இப்போ உஜாலாவுக்கு மாறிட்டேங்கிற மாதிரி நான் இப்போ பேலியோ டயட் டுக்கு மாறிட்டேன்னு சொல்ற கூட்டம் அதிக ரித்துக் கொண்டே போகிறது. டயட்டில் இருப்பது தெரியும் அது என்ன பேலியோ டயட் என்று புரியாமல் இருப்பவர்களுக்கா இதைப் பற்றி சிறிய விளக்கம்.

பேலியோ டயட் கடைப்பிடிப்பதால் இரண்டே மாதத்தில் உடல் எடை 10 கிலோவுக்கும் அதிகமாக குறைந்துவிட்டது என்று சொல்பவர்களை இணையத்தில் பார்க்கிறோம். ஆனால் சுயமாக நீங்களே பேலியோடயட்டை பின்பற்றுவது உடல் ஆரோக் யத்துக்கு நல்லதல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

பேலியோடயட்:
உடலுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது தான்பேலியோ டயட். அதாவது கொழுப் பைக் குறைக்க கொழுப்பை சாப்பிட வேண்டும் என்பதே பேலியோ டயட் வலியுறுத்துகிறது. பேலியோ உணவு முறையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு முதன்மைச் சத்து கொழுப்பும் புரதமும் தான். அன்றாடம் நாம் உண்ணும் உணவின் மூலம் 80% வரை கார் போஹைட்ரேட் சத்துக்களைப் பெறுகிறோம். 

அதை மாற்றி 60 சதவீதம் புரதங்களும் 35 சதவீதம் கொழுப்புகளும் மிகக் குறைந்த அளவில் 5 சதவீதம் மட்டுமே கார்போஹைட் ரேட்டுகளும் கிடைக்கும்படி பேலியோவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இறைச்சிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான அளவே உள்ளது. 

பேலியோடயட் உணவுகள்:
சுத்தமான முறையில் கடைப்பிடிக்கப்படும் இந்த டயட்டில் செயற்கை சேர்க் கைகளான பிரிசர்வேட்டிவ்ஸ், செயற்கை சுவை யூட்டிகள் தவிர்க்கப்படும்.
ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், கேரட், கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ், கத்தரிக்காய், காலிஃப்ளவர், பச்சைவெங்காயம், குட மிளகாய், தாவரங்கள் உண்ணும் விலங்கு இறைச்சி மற்றும் பறவை இறைச்சிகள், கடல்வாழ் உயிரினங்கள், பாதாம் பருப்பு, பூசணி விதை, சூரிய காந்தி விதை, வால்நட்ஸ், முந்திரி போன்ற பருப்புகள். எண்ணெய் வகைகளில் ஆலிவ், அவ கேடோ, தேங் காய் எண்ணெய் போன்றவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேலியோடயட் கடைப்பிடிப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பால் சார்ந்த உணவுகள் சீஸ், தயிர், வெண்ணெய், ஐஸ்க்ரீம் வகைகள், இனிப்பு நிறைந்த பழச்சாறுகள், பிரெட், ஓட்ஸ், தானி யங்கள், உப்பு நிறைந்த பதார்த்தங்கள், செயற்கை குளிர்பானங்கள், எண்ணெயில் பொறித்த  உணவு வகைகள், இனிப்புகள் போன்றவற்றை அறவே தொடக்கூடாது.

பேலியோ டயட் பலன்:
பேலியோ டயட்டால் உடலில் கார்போ ஹைட்ரேட் குறைந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. நாம் உண்ணும் கொழுப்பிலிருந்து உடல்தனக்கு தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்வதோடுஉடலுக்குசத்துதேவைப்படும்போது மெள்ள மெள்ள தனக்கு தேவைப்படும் கூடுதல் சக்தியைக் கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு கட்டுக்குள் வருகிறது.

யாருக்கு பேலியோ டயட்:
எல்லோருக்குமானதல்ல பேலியோ டயட் என்பதை உணர்ந்துகொள்ள வேண் டும். உடலில் சிறுநீரகம்,கல்லீரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக்கொண்டிருப்பவர்கள் பேலியோ டயட்டைக் கடைப்பிடிக்ககூடாது. சுயமாக மருத்துவரின் அனுமதியின்றியும் பேலியோ உணவை எடுக்கக் கூடாது. உங்கள் உடல் பேலியோ டயட் உணவை எடுக்க உகந்ததா என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

டயட், பேலியோ டயட் எல்லாமே சுயமாக கடைப்பிடிப்பது மேலும் ஆரோக்ய சீர்கேட்டையே உண்டாக்கும். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close