எது சிறந்தது- சிவப்பு மிளகாயா? பச்சை மிளகாயா?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும் இந்திய மிளகாய்கள் சுவையளவிலும், சத்துக்களின் அடிப்படையிலும் மாறுபடுகின்றன. சிவப்பு மிளகாய் பச்சை மிளகாயை விட அதிக காரத்தன்மை கொண்டது. மேலும் சிவப்பு மிளகாயில் இரும்புச் சத்தும், வைட்டமின் 'C' சத்தும் மிகுந்துள்ளன. சிவப்பு மிளகாயை உண்பதால் எளிதில் நம் உடல் சக்தியினை எரிக்கலாம். ஜலதோஷம் உள்ளவர்கள் சிவப்பு மிளகாயை உட்கொள்வதால் மூக்கடைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். மேலும் இவற்றை உண்பதால் ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளையும் நீக்கலாமாம்! பச்சை மிளகாய் உணவுக்கு கூடுதல் சுவை அளிக்கவல்லது. மேலும் பச்சை மிளகாயை எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாமாம். பச்சை மிளகாயில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் செரிமானத்திற்கு உகந்தது. மேலும் இவற்றில் வைட்டமின் 'E' நிறைந்து உள்ளதால் தோல்களின் நலனுக்கும் ஏற்றது. மேலும் பச்சை மிளகாய்களில் 'beta-carotene' மிகுந்துள்ளதால் அவை இதய நோய்கள் ஏற்படாமலும் தடுக்குமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close