• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

மூட்டு வலிக்கான முக்கிய காரணிகளும் தீர்வுகளும்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மூட்டுவலியானது மிக அதிக வேலை, அல்லது மிகக் குறைந்த வேலை என்றிருக்கும் எந்த வயதினருக்கும் வரக்கூடும். பொதுவாக, 45 வயதைக் கடந்தவர்களுக்கு மூட்டு எலும்புகள் தேய்மானம் அடைவதால், மூட்டுவலி ஏற்படலாம். சத்தான உணவும் போதிய உடற்பயிற்சியும் இல்லாமல் இருக்கும் வாழ்க்கைமுறையும் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணமாகிறது. தவிர, டி.பி, சர்க்கரை நோய், சொரியாசிஸ் பாதிப்பு, உடல்பருமன், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு கொண்டவர்களும் மூட்டுவலிக்கு எளிதில் இலக்காவார்கள். புத்தகப் பை சுமப்பது தொடங்கி, மணிக்கணக்கில் வீடியோ கேம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என கணினி, மொபைல் ஆகியவற்றின் அதிக பயன்பாடே இதற்கு காரணங்களாகும். ஆரம்ப நிலை மூட்டுவலிக்கு சில உடற் பயிற்சிகளும், வாழ்க்கை முறை மாற்ற ஆலோசனைகளும், உணவு முறைப் பரிந்துரைகளும் வழங்கப்படும். அதிகமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மொத்தத்தில், மிக அதிக வேலை, உடல் இயக்கம் இல்லாத மிகக் குறைந்த வேலை ஆகியவற்றைத் தவிர்ப்போம். சத்தான உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close