குழந்தைகளின் நடத்தையிலிருந்து அறிய வேண்டியவை - பாகம் 1

  varun   | Last Modified : 21 Sep, 2016 03:19 pm
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தனி கலை. நமது குழந்தைகள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து அவர்கள் சந்திக்கும் மனோரீதியான பாதிப்புகளை நாம் உணரலாம்: * உங்கள் குழந்தை தன் செயல்களை ரகசியமாய் செய்தால் நீங்கள் அது செய்யும் சிறிய தவறுகளையும் பெரிதாக்குகிறீர்கள் என பொருள். * உங்கள் குழந்தை அடிக்கடி கோபப்படுகிறது என்றால் அது உங்கள் பாராட்டிற்காக ஏங்குகிறது என அர்த்தமாம். * உங்கள் குழந்தை அதிக பயந்த சுபாவம் கொண்டதாய் இருந்தால், நீங்கள் அதன் தேவைக்கு முன்பே உதவி அவர்களின் சவால்களை சமாளிக்கும் திறனை முடக்குகிறீர்கள் என அர்த்தம். * உங்கள் குழந்தையிடம் அதிக பொறாமை குணம் தெரிகிறது என்றால் நீங்கள் அதனை அடிக்கடி மற்றவர்களோடு ஒப்பிடுகிறீர்கள் எனப் பொருள். * குழந்தை அதிகம் பொய் சொன்னால், அதனை நீங்கள் செய்த தவறுகளுக்கு அதிகமாய் தண்டித்துள்ளீர்கள் என அறியலாம். மேற்கூறிய குழந்தைகளின் செய்கைகளை உணர்ந்து நாம் நடப்போமேயானால் குழந்தை வளர்ப்பு என்பது நிச்சயம் பெற்றோருக்கு சுமையல்ல, சுகமே!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close