உணவுப்பொருட்களை லேபில் பார்த்து வாங்குகிறீர்களா?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஒருகாலத்தில், நாம் வாங்கும் உணவுப் பொருளில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால், தற்போது பாக்கெட் உணவுகளில் கட்டாயம் அதில் உள்ள மூலப்பொருட்கள், ஊட்டச்சத்துப் பட்டியல் இடம்பெற வேண்டும் என்று சட்டமே உள்ளது. பொதுவாக, ஒவ்வொரு பொருளிலும் மேற்பகுதியில் பரிமாரப்படும் உணவின் அளவு, கலோரி, ஊட்டச்சத்து மதிப்பு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இவை, பொருளுக்குப் பொருள் மாறுபடும். கீழ்ப் பகுதியில், ஒரு நாளைக்கு தேவையான கலோரிக்கு இந்த உணவின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். இதில், கொழுப்பு, சோடியம், நார்ச்சத்து ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களால் உச்சரிக்க முடியாத, உங்களுக்குத் தெரியாத பொருட்கள் ஆரம்ப இடங்களில் இருந்தால், அந்தப் பொருளை வாங்குவதைப் பற்றி பரிசீலனை செய்யுங்கள். எனவே பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இனியாவது பொருட்களை லேபில் பார்த்து வாங்குவோமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close