குறட்டையை விரட்ட சில எளிய வழிகள்!

  varun   | Last Modified : 23 Sep, 2016 12:02 pm
குறட்டை என்பது நோய் அல்ல, ஒரு குறையே. வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் இக்குறையால் நம்மை சுற்றியுள்ளவர்களே நம்மை வெறுக்கத் தொடங்குகிறார்கள். தூக்கத்தில் நாம் சுவாசிக்கும் போது ஏற்படும் சத்தத்தை தான் குறட்டை என்கிறோம். இக்குறையை போக்க, இதோ சில எளிய வழிகள் : * குறட்டைக்கு முக்கிய காரணம் சளி, இருமல் உபாதைகள் இருப்பதே. தைலம் கலந்த வெந்நீரில் ஆவி பிடிப்பதன் மூலம் சளிக்கு நிரந்தர தீர்வை பெறலாம். * இக்குறைப்பாடு உள்ளவர்கள் புகைப்பிடிப்பதையும், சாப்பிட்ட உடன் உறங்குவதையும் அவசியம் தவிர்க்க வேண்டும். * உடல் பருமன் உள்ளவர்கள் எடையை குறைத்தால் குறட்டையை தவிர்க்கலாம். * குறட்டையை குறைக்க மற்றும் படிப்படியாய் நிறுத்த இரவில் உறங்கும் போது உயரமான தலையணையை உபயோகிக்க வேண்டும். * இரவில் உறங்கும் போது பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புச்சத்து நிறைந்த துரித உணவுகளை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். * குறட்டையால் பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் சுவாச தைலங்களை நன்றாக தடவி கொண்டு உறங்கினால் குறட்டையை எளிதாக ஒழித்து விடலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close