அரிய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ள ஆப்பிள் பழம்

  varun   | Last Modified : 24 Sep, 2016 02:08 pm
"ஆப்பிள் பழத்தினை தினமும் உண்டு வந்தால் மருத்துவரிடம் போகும் அவசியமே ஏற்படாது", என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை தன்னுள் உள்ளடக்கி உள்ளது ஆப்பிள் பழம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். இப்பழத்தினை நன்கு மென்று உண்பதன் மூலம் வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள கிருமிகள் சாகும். ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் அமிலம், மலச்சிக்கலை நீக்கி, குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிள் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் அதனை, கோடை காலத்தில் அதிகம் உட்கொள்ளலாம். குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. இத்தகைய மகத்துவங்களை உள்ளடக்கிய ஆப்பிள்பழம் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, சருமத்தையும் அழகாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. என்ன, நீங்க இன்னிக்கு ஆப்பிள் பழம் சாப்பிட்டாச்சா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close