ஆரோக்கிய வாழ்விற்கு பெரிதும் உதவும் முட்டை

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாம் அனைவரும் விரும்பி உண்ணும் முட்டைகளில் சத்துக்களுக்கு பஞ்சமில்லை. முட்டைகளில் வைட்டமின் 'A' , 'B2', 'B5', 'B6', 'B12', 'D', 'E', 'K' ஆகியவையும், ஃபோலேட், பாஸ்பரஸ், செலனியம், கால்சியம், ஜிங்க் ஆகிய சத்துக்களும் மிகுந்து காணப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு முட்டையிலும் 6 கிராம் ப்ரோடீனும், 5 கிராம் நல்ல கொழுப்பும் காணப்படுகின்றன. முட்டை சாப்பிடுவதால் நமது கல்லீரலின் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தலாம். முட்டையில் உள்ள லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் சத்துக்கள் கண்களின் நலனுக்கு உகந்ததாம். முட்டையில் உள்ள கோலின் என்னும் தனிமம் நமது மூளை அணுக்களின் வளர்ச்சிக்கு அவசியம் தேவையாம். அவித்த முட்டைகளில் காணப்படும் ஒமேகா-3 அமிலம் நம்மை பல்வேறு இதய நோய்களில் இருந்து காக்குமாம். மேலும் முட்டையில் ப்ரோடீன்கள் நிறைந்து உள்ளதால் அவை உடல் எடையை குறைக்கவும், எலும்புகளின் நலனுக்கும், ரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும் பெரிதும் ஏற்றதாம். இதோடு அன்றாடம் முட்டை எடுத்துக்கொள்வதால் வலிப்பு நோய்களில் இருந்தும் தப்பலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close