ஜப்பானை வதைக்கும் 'ஹிக்கிகோமோரி'

  shriram   | Last Modified : 27 Sep, 2016 07:17 am
ஜப்பானில் வளர்ந்து வரும் தனிமையில் வாழும் பழக்கம் அந்நாட்டின் பல இளைஞர்களின் வாழ்க்கையை திசை திருப்பியுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தற்போது அந்நாட்டில் 15-39 வயதுடைய, ஏறத்தாழ 5 லட்சம் பேர் தங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, அதிகம் வெளியே செல்லாமல் சமுதாயத்துடன் ஒரு இணக்கமின்றி வாழ்கிறார்கள் என கூறப்படுகிறது. ஜப்பானில் இந்த பழக்கத்தை 'ஹிக்கிகோமோரி' என்று அழைக்கின்றனர். இப்படி வாழ்வதனால் இளம் தலைமுறையினர் பலரும் காதல், திருமணம் எதிலுமே ஈடுபாடில்லாமல் உள்ளனர். இது போன்றவர்களுக்கு காமிக்ஸ் படிப்பது, வீடியோ கேம்ஸ், டிவி தொடர்கள் பார்ப்பது போன்றவற்றில் மட்டும் தான் ஆர்வம் இருக்கிறதாம். இவர்களுக்கு எல்லோரோடும் பேச, பழக உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், வெளியே செல்ல பயப்படுவார்களாம். உலகப் புகழ் ஜப்பான் கார்ட்டூன் தொடர்களை அனிமே என்றழைப்பார்கள். நம்மூர்லேயே பலர் இது போன்ற தொடர்களுக்கு அடிமையாக பல இளைஞர்கள் உள்ளனர். இந்த ஹிக்கிகோமோரி கலாச்சாரம் இப்போது மற்ற நாடுகளுக்கும் பரவி வருவது வருத்தம் அளிக்கும் விஷயம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close