மலச்சிக்கலை தடுக்கும் எளிய வழிகள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உணவில் சரியான அளவில் தினசரி தண்ணீர், காய்கறி, பழம் எடுப்பவர்களுக்கு மலச்சிக்கல் என்பது தெரியாத ஒரு விஷயமே. மலம் இறுகாமல் இருக்க நார்ச்சத்து மிகவும் அவசியம். காய் கனிகளில் நார்ச்சத்து சிறப்பாக உள்ளது. உணவுடன், உணவுக்கு நடுவில் பச்சையாக காய் கனி சாலட் உண்டு பழகி மகிழும் குடும்பங்களில் இந்தப் பிரச்னை வரவே வராது. காய் கனி நிறைந்த உணவுகள் பருமனையும் குறைக்கும். உணவுக்குழாயில் உணவு பிரயாணம் செய்ய நீர் மிக அவசியம். உடலில் குடல் அசைவதற்கு நடப்பது மிகமிக அவசியம். காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மலச்சிக்கல் வராது. பிரயாணத்தின் போது, நோய்வாய்ப்படும் போது, மோசமான, திடீரென ஏற்படும் மலச்சிக்கலுக்கு அந்தந்த நாட்களுக்கு, அந்த வேளைக்கு மட்டும் மருந்துகள் உண்ணலாம். மலச்சிக்கல் மருந்துகளை காரணம் தெரிந்து எடுத்துக் கொள்வதே நல்லது. மலச்சிக்கல் வராமல் தடுக்க தண்ணீர், காய், பழம் என உணவை மருந்தாக உட்கொள்ளலாம். மலச்சிக்கல் நோயின் போது மருத்துவரை நாடி மருந்து எடுத்துக் கொள்வதே நல்லது. உணவால் மட்டுமன்றி மருந்துகளுடன் மருத்துவர் உதவியுடன் நோயை வெல்வது எளிது!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close