ஆண்களின் வழுக்கைக்கான காரணங்கள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

முடி கொட்டுவது சாதாரணம் தான். அதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது சாதாரணம். ஆனால் அதற்கும் அதிகமாக கொட்டினால் தான் பிரச்சனை. ஓயாமல் முடியை சீவுவதால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, விரைவில் வழுக்கை ஏற்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, தலைக்கு குளித்த பின்னர் டவல் கொண்டு கடுமையாக தலையை தேய்த்தால், வலுவிழந்து இருக்கும் முடி கையோடு வந்துவிடும். தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். முக்கியமாக ஹேர் ட்ரையரை எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடாது. ஹேர் ஸ்டைலிங் பொருட்களை முடி அதிகம் கொட்டும் போது பயன்படுத்தக்கூடாது. தலையில் தொப்பி அணிவதால், முடியில் அழுத்தம் அதிகரிப்பதோடு, அதிகமாக வியர்த்து ஸ்கால்ப்பில் தொற்றுகள் ஏற்படக்கூடும். இதனால் கொட்டும் முடியின் அளவும் அதிகரிக்கும். எனவே இவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும். முடி கொட்டுவது சாதாரணம் தான் என்று நினைத்து விட்டுவிட வேண்டாம். அப்படி விட்டால் நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். எனவே முடி கொட்டினால் உடனே மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close