நமது சிறுநீரின் நிறமும் உடல் நலனும்- பாகம் 1

  varun   | Last Modified : 06 Oct, 2016 11:25 am
நமது சிறுநீரின் நிறத்தினை வைத்து நமது உடல் நலனை கணித்து விடலாமாம். சாதாரணமாக வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் உள்ள நம் சிறுநீர் நிறம் மாறினால் என்ன ஆகும்? பார்ப்போம் கீழே: * சிவப்பு நிறத்தில் சிறுநீர் போனால் நமது சிறுநீர் பாதையில் உள்ள ரத்த அணுக்கள் பாதிக்கப்பட்டு சிறுநீரில் கலந்திருப்பதாக பொருள். இதனால் சிறுநீரகத்தில் கட்டி, புற்றுநோய் போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். மேலும் கருப்புபெர்ரி பழங்கள், பீட்ரூட் போன்றவற்றை உணவில் எடுத்துக் கொண்டாலும் சிறுநீரில் இத்தகைய நிறமாற்றம் ஏற்படும். அது தவிர காசநோய்க்காக எடுக்கும் ஒரு வகை மருந்தினாலும் இத்தகைய நிற மாற்றம் தோன்றும். * சிறுநீர் நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்குமானால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக நிறமூட்டிகள் உள்ளதாய் அர்த்தம். சில வகை நோய்களுக்காக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றினாலும் இந்த நிற மாற்றம் ஏற்படும். மேலும் உடலில் அதிக அளவு கால்சியம் சத்து சேர்ந்தாலும் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் தெரியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close