சிறுநீரின் நிறமும் உடல் நலனும்- பாகம் 2

  varun   | Last Modified : 06 Oct, 2016 11:24 am

நமது உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்தே நமது உடல் நிலையையும், பல்வேறு நோய்களையும் கண்டறிய முடியும் என்று முன்பு பார்த்தோம். அதன் தொடர்ச்சி இங்கே: * பழுப்பு நிறமாய் சிறுநீர் கழிந்தால் நமது சிறுநீரகம் அல்லது கல்லீரலில் ஏதோ கோளாறு உள்ளதாய் அர்த்தம். மேலும் மிக அதிக உடற்பயிற்சி செய்வதாலேயும் இத்தகைய மாற்றம் ஏற்படும். சில நேரங்களில் நாம் மலேரியா நோய்க்காக எடுக்கும் மருந்துகளாலும் சிறுநீர் பழுப்பு நிறமாய் வெளிப்படும். * ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் கழிந்தால் பித்தபையிலோ கல்லீரலிலோ பிரச்சினை உள்ளதாய் அர்த்தம். மேலும் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லையெனினும் இந்த நிறத்தில் சிறுநீர் தென்படும். * சிலருக்கு வெள்ளை நிறம் (அதாவது) நிறமின்றியும் சிறுநீர் வெளிப்படும். இதற்கு காரணம் சிறுநீரில் அதிக அளவில் கால்சியம் அல்லது பாஸ்பேட் உப்புக்கள் நிறைந்திருப்பதே ஆகும். மேலும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றினாலும் சில நேரங்களில் வெள்ளை நிற சிறுநீர் வெளியாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close