உடல் எடையை குறைக்க உதவும் வாழைப்பழம்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு அருமருந்தாய் திகழ்கிறது வாழைப்பழம். ஒவ்வொரு 100 கிராம் வாழைப்பழத்திலும் 90 கலோரிகளும், 3 கிராம் நார்ச்சத்தும், 23 கிராம் கார்போஹைட்ரேட் சத்தும் நிறைந்துள்ளது. மேலும் பசியை நொடிப்பொழுதில் போக்கவல்ல இப்பழங்கள் ஒரு ஆரோக்கியமான நொறுக்குத் தீனியும் கூட. வாழைப்பழம் எவ்வாறு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என பார்ப்போமா? * உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைக் கூட்டி அதீத பசியினை குறைக்கும் ஆற்றல் படைத்தது வாழைப்பழம். நாம் உண்ணும் கார்போஹைட்ரேட் உணவில் 5 சதவிகிதத்தை குறைத்து அதற்கு பதில் வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டோமேயானால் நம் உடலின் 30 சதவிகித கொழுப்பைக் கரைக்கலாம். * வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் உடலில் அதிக நீர்ச்சத்து சேர்வதைத் தடுத்து வயிற்றுக்கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதனால் மயக்கம், தசைப்பிடிப்பு போன்றவையும் ஏற்படாமல் தடுக்கப் படுகிறது. * வாழைப்பழங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் உடலின் செரிமானத்தை சீர்படுத்தி உடல் எடை கூடுவதை தடுக்கிறது. மேலும் இப்பழங்களில் உள்ள நார்ச்சத்தின் காரணமாக இவற்றை உட்கொள்வதால் பசி கட்டுப்படுகிறது. * இப்பழங்கள் உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னரும் எடுத்துக்கொள்ள ஏற்றது. பல வகை சத்துக்களையும், சர்க்கரைச் சத்தினையும் பெற்றுள்ள இவை உடலுக்கு தேவையான சக்தியை உடனுக்குடன் தருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close