முகத்தில் எண்ணெய் பசையா? அப்போ இத டிரை பண்ணுங்க!

  gobinath   | Last Modified : 06 Oct, 2016 01:05 pm

எண்ணெய்த் தன்மையான சருமத்தைக் கொண்டவரா நீங்கள்? எவ்வளவோ டிரை பண்ணியும் உங்க எண்ணெய்த் தன்மையான சருமம் அப்படியே இருக்குதா? அப்போ இத டிரை பண்ணி பாருங்க. பூசணிக்காயை நன்கு மசித்து,அதில் தேன்,ஆப்பிள் சீடர் வினிகர் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால்,முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை தீரும். அதேபோல், பூசணிக்காயில் உள்ள சதையை எடுத்து கூழாக்கி,அதனை முட்டையின் வெள்ளைக்கரு,பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ள வேண்டும்.காலை அல்லது இரவு தூங்கச் செல்லும் முன், அந்த பேஸ்ட்டை 15 நிமிடம் முகத்தில் பூசி ஊறவைத்து,பின்னர் கழுவினால் முகம் பளபளப்பா மாறுவதை நாம் உடனடியாக பார்க்க முடியும் என்கின்றனர் அழகு கலை நிபுணர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close