கண்களை இளமையாக பாதுகாக்கும் வழிகள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கண்களை இளமையாக பாதுகாத்தால் பாதி வயது குறைந்தது போல் இருப்பீர்கள். கண்கள் தான் அழகின் முதல் அஸ்திரம். கண்கள் ஒருவரின் வயதை கணித்து சொல்லும் முதல் உறுப்பு. பிறகு தான் சருமம் வெளிப்படுத்தும். கண்களை இளமையாக பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாமா? * வெகுநேரம் கணினியை பார்த்துக் கொண்டிருந்தால், நரம்புகள் சோர்ந்து போகும். இதனால் அங்கே தளர்வடைய ஆரம்பிக்கும். இரத்த ஓட்டம் குறைந்து, அங்கே நச்சுக்கள் தங்கி, வயதான தோற்றத்தை அளிக்கும். இப்படிதான் சருமம் முதிர்வடைதல் ஆரம்பிக்கிறது. * கண்கள் பெரியதாக தெரிய வேண்டுமெனில் கருவளையம் இருக்க கூடாது. சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால், கண்களில் ஈரப்பதம் குறைந்து கண்களில் கருவளையம் தோன்ற ஆரம்பிக்கும். இதற்கு நல்ல தரமான கன்சீலரை பயன்படுத்தலாம். * கண்களுக்கு கீழே உள்ள நீர் பைகளால் கண்கள் சிறிதாக தெரியும். இதனை தடுக்க நன்றாக உறங்க வேண்டும், நீர் பைகள் உள்ள இடத்தில் குளிர் தேநீர்பையை வைக்கவும். * மெலிதான புருவம் இருந்தால் கண்கள் பெரிதாக தெரியாது. புருவசீரமைப்பை தொடர்ந்து மேற்கொள்வதால் புருவம் அழகாக தெரியும், கண்களும் அழகாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.