டீன் ஏஜ் சிக்கல்கள் 3 - பிள்ளைகள் நேரத்துக்கு வீடு திரும்புவது இல்லையா?

  நாச்சியாள் சுகந்தி   | Last Modified : 19 May, 2018 06:11 pm

சமீபத்தில் 'அன்னையர் தினம்' முகநூலில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பெரும்பாலான ஆண்கள், 'நான் சரியான நேரத்துல வீட்டுக்கு வரலேன்னா என் அம்மா வாசலுக்கும் வீட்டுக்கும்மா நடந்திட்டே இருப்பாங்க' என்று அம்மாவின் பாசத்தை ரொமான்டிசைஸ் செய்து எழுதியிருந்தார்கள்.

 அந்த அம்மா வாசலுக்கும் வீட்டுக்கும் அலையும் நேரத்தில் அவர்களின் மனம் படும் பாடு குறித்தும், அதனால் அவர்கள் உடல் நலன் பாதிக்கப்படுவது குறித்தும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

பொதுவாக, பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம் வகுப்புக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால், 'வீட்டுக்கு லேட்டா வந்தால் தவறு இல்லை' என்கிற மனோபாவம் இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, கடந்த தலைமுறை ஆண்பிள்ளைகளிடம் கூட இயல்பாக இருந்தது.

நம் கலாச்சாரத்தில் பெண்குழந்தைகள் தான் வீட்டுக்கு சரியான நேரத்தில் வந்துவிட வேண்டும் என்கிற கட்டாயம். ஆனால், 'ஆண்பிள்ளை எப்ப வந்தாலும் பரவாயில்லை, பத்திரமா வந்தா போதும்' என்கிற மனநிலை பெற்ரோர்களிடம் இருக்கிறது. ஆனால், அது பல தவறுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை பெற்றோர் மிகவும் தாமதமாகத்தான் உணர்ந்துகொள்கிறார்கள். எல்லாம் எல்லை மீறி போன பிறகு, 'அய்யோ இப்படி ஆயிருச்சே' என்று புலம்பி பயன் இல்லை அல்லவா?

உங்கள் பிள்ளைகள் பள்ளி, கல்லூரி முடிந்து என்றாவது ஒருநாள் லேட்டாக வந்தால் அதை அனுமதிக்கலாம். ஆனால், வாரத்தில் ஐந்து நாட்கள் லேட்டாகத்தான் வருவார்கள் என்றால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா? 

பெரும்பாலும் டீன் ஏஜ் பிள்ளைகள் ஏதாவது ஓர் இடத்தில் கூடி பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பேச்சில் அவர்களுக்கு உலகம் மறந்துவிடும். அந்த நேரத்தில் அம்மா போன் பண்ணினால் 'இதோ வந்துட்டேன்' என்று சொல்வார்கள். ஆனால் வரமாட்டார்கள். அதற்குள் அம்மாவுக்கு இரத்த அழுத்தம் எகிறிப்போய் இருக்கும். காரணம், அவர்கள் மனதுக்குள் ஆயிரம் விஷயங்களை நினைத்து கற்பனை செய்துகொள்வார்கள்.

அப்படியானால் இதற்குத் தீர்வுதான் என்ன என்பவர்களுக்கு... 

உங்கள் பிள்ளை எங்கு, யாருடன், எதற்காக செல்கிறார் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படி அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து செல்லும்போது 'இத்தனை மணிக்குள் வீட்டுக்குள் வந்துவிட வேண்டும்' என்பதை சொல்லியனுப்புங்கள். நீங்கள் சொல்லியனுப்பிய நேரத்தில் கால் மணி நேரம் தாமதமாக வந்தால் அனுமதியுங்கள். 

ஆனால், 'நீங்க சொல்றத சொல்லுங்க... நான் வர டைம்க்குத்தான் வருவேன்' என்று நடக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களை எனன் செய்யலாம்? 

ஒருமுறைக்கு இருமுறை வாய்ப்ப்புக் கொடுங்கள். அப்படியும் அவர்கள் சரியான நேரத்துக்குள் வரவில்லை எனில் அடுத்த நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு வெளியில் செல்ல அனுமதியில்லை என்று என்று உறுதியாகக் கூறுங்கள். அதை நீங்கள் மிக உறுதியாக கடைபிடித்துப் பாருங்கள். பிள்ளைகள் நிச்சயம் வழிக்கு வருவார்கள். 

இவ்வளவு ஸ்டிரிக்டா இருக்கணுமா? என்று கேட்கும் பெற்றோர்களுக்கு... 

பிள்ளைகளுக்கு இந்த வயதில் எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் உண்டு என்று சொல்லிப் பார்ப்பதன் மூலம், அதை அவர்கள் காலத்துக்கும் அதை பின்பற்றுவார்கள். அப்படி பின்பற்றாத பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை, குறிப்பாக இல்லற வாழ்க்கை பல இன்னல்களுக்கு உள்ளாகி விவாகரத்து வரை செல்கிறது என்பது உண்மை. 

இன்னொன்று, உளவியல்ரீதியாக இருட்டு அல்லது அளவுக்கு மீறிய சுதந்திரம் அனைத்து தவறுகளையும் செய்யத் தூண்டும் என்கிறது மனநல மருத்துவம். பிறகு, முடிவு உங்கள் கையில்.

- நாச்சியாள் சுகந்தி, தொடர்புக்கு: natchimakal@gmail.com

முந்தைய அத்தியாயம்: டீன் ஏஜ் சிக்கல்கள் 2 - உங்கள் பிள்ளைகளுக்கு செல்போனே கதியா?

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.